.

.
.

Tuesday, November 24, 2009

ஆத்மா 9வண‌க்கம் தெய்வங்களே ! அனைவரும் நலம் தானே...? :-) எங்கே சில காலம் நம்மைக் காண‌வில்லை என்பதால், அநியாயத்துக்கு உயிரோட இருக்கியானுலாம் கேள்வி கேட்டு மெயில் அனுப்புறாய்ங்கப்பா !!!!?
:( இருந்தாலும் அந்த அக்கரைக்கு நன்றி சொல்லித்தான் ஆகோனும் இல்லையா...! நன்றி நன்றி நன்றி. இதோ உங்கள் நிம்மதியைக் களைத்து தூக்கத்தைக் கெடுக்க மர்மங்களின் சங்கமங்களாக ம‌லர்ந்துவிட்டது ஆத்மா 9'ம் பாகம்...! மர்மங்களை சந்திக்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்...!
*******************************************************
பேய்கள் பலவகை !!!

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப்பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது,கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப்பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச்செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவைபுத்திசாலிப் பேய்கள்.சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டேஇருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில்கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே”கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாடமட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கிவிடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவேஇருக்குமாம்....! மேலும் த‌கவல்களுக்கு இங்கே படித்து பயப்படவும்.
**********************************************************
முன்கதைச் சுருக்கம்
சிவாவின் ஆத்மாவினால் அலைக்க‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ சுசி, பலவேறு துன்பங்களுக்கு ஆளாகி மனம் நைந்து நொந்து நூலாகிப்போகிறார், தன் சின்னஞ்சிறு குழந்தைகளைக்கட்டிக்கொன்டு, இறை நம்பிக்கையைப் பற்றிக்கொன்டு, கண்ணுக்கு தெரியாத, மானிடர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் நம்பிக்கைக்கும் சவால்விடும் அமானுக்ஷ்ய யுத்தத்க் களத்தில் அவர்... சிவாவின் அடுத்த ஆட்டம் வேலை முடிந்து, இருண்டு அடர்ந்த அந்த காட்டு வழியே தனது "ஜாகுவார்" மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கண்வரை நோக்கி வெறியோடு திரும்புகிறது, இனி...

பார்வைக்கு அஜானுபாகுவாக அமைந்திருந்த சுசியின் கணவர், அவரது வாட்ட சாட்டமான பெரிய உருவமும், அகன்ற பெரிய விழிகளும், மைக்கை விழுங்கிவிட்ட குரலும் அவரை ஒரு பெரிய மாவீரர் ரேஞ்சில் மற்றவர்கள் கனிப்புக்கு கொன்டுபோய் நிறுத்தியிருந்தது.

குடும்பத்திற்காக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய அந்த குடும்பத்தலைவர் தனது தகுதிகேற்ப அருகாமையில் அமைந்திருந்த நெல் ஆலையில் உடலுழைப்புத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தமது மனைவியை வேலைக்கு அனுப்பக்கூடாது எனும் தீவிரமான பிற்போக்கு சிந்தனையும் படைத்தவராயிருந்தார். எப்பொழுதும் அதிகாலையில் வேலைக்கு புற‌ப்படும் அவர் வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகிவிடுவது வழக்கம், எப்பொழுதாவது சில சமயங்களில் மதிய உண‌வுக்கு வீடு திரும்புவதும் உண்டு. சபிக்கப்பட்ட அந்த மாலை வேலை முடிந்து மிதி வண்டியை மிதித்துக்கொன்டு அந்த வனாந்தரப் பாதையில் தன்னந்தனியாக வீடுதிரும்பிக்கொன்டிருக்க...

மழைத்தூரல்களோடு வெளிச்சம் தொலைத்த வானம், கருமேகங்களை ஆடையாய் சுற்றிக்கொன்டு பூமியை இருள் கவியச் செய்திருந்தது, சுசியின் கணவர், அஜானுபாகுவான தனது இரட்டை நாடி சரீரத்திற்கேற்ப தனது பெரிய ஜாக்குவார் மிதிவண்டியை மிதித்த வண்ணம் வீடு திரும்பிக்கொன்டிருக்கிறார், எப்போதும் நன்கு இருட்டிய பின்னரே வீடு திரும்பும் அவர் இன்று வேலை முடிந்து சற்று இருட்டுமுன்னரே வீடு திரும்பிக்கொன்டிருந்தார், மழைச்சாரல்கள் அவர் மேல் தெரித்து உடை நனைத்து உருண்டோடிக்கொன்டிருந்தன புவி நோக்கி..., அவரோ அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவ்வப்போது முகத்தில் படியும் நீர்த்திவலைகளை மட்டும் ஒரு கையால் வழித்தெறிந்தவண்ணம் அந்த சேற்றுக்குழம்பாகிப் போயிருந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் தனது மிதிவண்டியை மிதித்த‌ வண்ணம் ( சேறுதான் சந்தணக்குழம்பாய் பாதை முழுக்க ஜமுக்காளம் விரித்து வைத்திருக்கிறதே, பிறகெப்படி வேகமாய்...? இருண்டிருந்த பொழுதை பிளந்து பாதை காட்டிக்கொன்டு வந்தது அவர் மிதிவண்டி விளக்கின் வெளிச்சம், இருளும் மழையும் சூழ்ந்த அந்த நேரத்தில் பாதையின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு சிறு உருவம் மழையில் நனைந்தபடி, பாதைக்கு குறுக்கே கூனிக்குறுகி அமர்ந்திருப்பதைக் காண்கிறார். ஆச்சரியத்தால் உந்தப்பட்டு அவ்வுருவத்தை நெருங்கி, அது தலை குனிந்த நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் என்பதையறிந்து மேலும் வியப்போடு, 'டேய் தம்பி, ஏன்டா இந்த மழையில் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் எனக் கேட்க, அந்த உருவம் அதை சற்றும் சட்டை செய்யாது அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் சுபாவத்திற்கேற்ற கோப‌ம் தலைக்கேற ஏன்டாடேய், அறிவுகெட்டவனே, எத்தனை வாட்டி கூப்பிடுறேன் காதில விழலையா என திட்டி முடிக்குமுன்னே, அருகாமையில் ஒரு பெரிய காட்டு மரம் பெரும் சப்தத்தோடு கிளைகள் முறிந்து மண்ணில் சட சடத்து சரியும் ஓசை அமைதியைக் கிழித்து ஆரவாரம் கிள‌ப்ப...அந்த சப்தம் ஒலித்த திசை நோக்கி திரும்பிய அவர் பளீரென மின்னல் வெட்டு ஒன்று ஒளீர, சற்று முன் தனக்கு முன் அமர்ந்திருந்த அந்த உருவம் தனக்கு முன்னே இல்லாமல் போய்விட்டதைககண்டு அதிர்கிறார். மனம் துனுக்குற, சிந்தனை அலைபாய, சட்டென எதையும் சிந்திக்காது, காறி உமிழ்ந்து, பெருங்குரலில் தனக்கு தோன்றிய அத்தனை தெய்வங்களையும் மனதுள் மண்டியிட்ட வண்ணம், திரும்பிப்பாராமல் தனது மிதிவண்டியை மிதிக்கிறார்..., இருளின் கருமை, திடுக்கிடும் பல வினோத ஓசைகள், மழைத்தூரல்களின் வெறித்தாக்குதல், அலைபாய முயலும் சிந்தனை, சிதையப் பார்க்கும் கவனம், இவை அனைத்தையும் ஒருங்கே சமாளித்த வண்ணம் அந்த சேற்றுப் பாதையில் ஏதோ ஒரு சக்தியின் துணையோடு அவரது பயணம் தொடர்கிறது, தனை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்தும் உணராத நிலையில்...!

9 comments:

manogkaran krishnan said...

ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி.....எங்களை எல்லாம் பயமுறுத்துவதற்கேன்று பிறவி எடுத்திருகின்றீர்களோ.......நாங்க எல்லாம் ரொம்ப ரொம்பா பயுந்துடோம்......

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

புனிதா||Punitha said...

Ippo ellam vampire season illaiya..athu patri konjam ezhuthungalen...immortal life patri :-)

Tamilvanan said...

//ஆத்மா 9'ம் பாகம்...! மர்மங்களை சந்திக்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்...!//
//அன்போடு அழைத்துச் செல்கிறேன் //
//அன்போடு//

ப‌திவு போட‌ற‌து பேய்க்க‌தை, அதுக்கும் அன்போடு எங்க‌ளை அழைத்துச் செல்லுவீங்கீளாக்கும் எப்ப‌டி உங்க‌ளால‌ ம‌ட்டும் முடியுது? ச‌க‌ல‌க‌லா வில்லி நீங்க‌ ம‌ன்னிக்க‌வும் ச‌க‌ல‌க‌லாவ‌ல்லி நீங்க‌ள்.

சிவனேசு said...

manogkaran krishnan

வேற வழியே இல்லைங்க பாஸ்... இதுக்கே பயந்தா எப்படி ? இன்னும் நிறைய எழுதி பயமுறுத்தும் ஐடியா நிறைய இருக்குதுங்களே என்ன செய்யிற‌து !!!? :)

சிவனேசு said...

ஆஹா...! என்னே ஒரு பாராட்டு,...! அப்படியே பி.எஸ்.வீரப்பா அவர்களே கமெண்டு எழுதியது போல...! உங்களால மட்டும்தான் தல இப்டிலாம் முடியுது...!!!

சிவனேசு said...

Mrs.Menagasathia

அசத்திட்டீங்களே கண்மணி...! இந்த விருதுகள் அடியேனின் பதிவுகளின் செழுமைக்கு மேலும் உற்சாகமளிக்கின்றன‌, எமது அன்பும் நன்றியும்...!

சிவனேசு said...

புனிதா||Punitha

ஆகட்டும் தோழி கூடிய விரைவில் அப்ப‌டியே பதிவு போட்டிடலாம்...! ம‌கிழ்ச்சி தானே...?

கா.பால் முருகன்,(தமிழன்) said...

ஆத்மாக்களின் முடிவு எப்போதம்மா??????????????????????????